பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விவரங்களில் முரண்பாடு - பொய்யான விவரங்கள் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டதா?

கடந்த 3 ஆம் தேதி நாடாளுமன்ற கேள்வி நேரத்தின்போது, பள்ளிகளில் இடைநிற்றல் விவரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது.

Update: 2020-02-07 11:17 GMT
கடந்த 3 ஆம் தேதி நாடாளுமன்ற கேள்வி நேரத்தின்போது, பள்ளிகளில் இடைநிற்றல் விவரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் மாநில வாரியாக விவரங்கள் வெளியிடப்பட்டன. அவற்றில், தமிழகத்தில் இடைநிற்றல் அளவு அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவண புத்தகத்தில் இடைநிற்றல் அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் இடைநிற்றல் அளவு  2017-18 ஆம் ஆண்டில் 16 புள்ளி 2 சதவீதமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில்  9 ஆம் வகுப்பு 10 வகுப்பு  மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 2019-20 ஆம் ஆண்டில் 4 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசுக்கு உண்மையான விவரங்களும்,  தமிழக சட்டமன்றத்தில் பொய்யான தகவல்களும் அளிக்கப்பட்டதா? என்கிற கேள்வியை கல்வியாளர்கள் எழுப்பி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்