புதிய மோட்டார் வாகன சட்டப்படி யார் அபராதம் வசூலிக்கலாம்? : தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கம்
புதிய மோட்டார் வாகன சட்டப்படி அபராதம் வசூலிப்பதற்கான வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.;
புதிய மோட்டார் வாகன சட்டப்படி அபராதம் வசூலிப்பதற்கான வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், அமல்படுத்தப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகன சட்டப்படி, அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அபராதங்களை வசூலிக்கும் கருவியில் கட்டணம் மாற்றம் செய்யப்படாததால், வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசு வெளியிட்டு அறிக்கையில், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்களுக்கு மேல் அதிகாரம் கொண்டவர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மட்டுமே அபராதம் வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.