தனியார் சிறு சேமிப்பு நிறுவனத்தில் செலுத்தப்பட்ட ரூ.5 கோடி : பணம் முதிர்வு காலம் முடிந்தும் திருப்ப தராத நிறுவனம்...

பொதுமக்களிடம் பணம் பெற்று கொடுத்த முகவர்கள் புகார்;

Update: 2019-07-04 03:49 GMT
தனியார் சிறு சேமிப்பு நிறுவனம் ஒன்று பொதுமக்களிடம் இருந்து தாங்கள் பெற்றுகொடுத்த பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்வதாக அந்நிறுவன முகவர்கள் புகார் அளித்தனர். வேலூரை தலைமையிடமாக கொண்ட தனியார் சிறு சேமிப்பு நிறுவனம் ஒன்றில், முகவர்கள் பலர் பொதுமக்களிடம் இருந்து 5 கோடி ரூபாய் வரை பணம் வசூல் செய்து, முதலீடு செய்தனர். இந்நிலையில்  முதிர்வு காலம் முடிந்தும் தனியார் சிறு சேமிப்பு நிறுவனம் பணத்தை திருப்பி தராத‌தால் முகவர்களிடம் பணம் கொடுத்த பொதுமக்கள் நெருக்கடி கொடுத்த‌தாக தெரிகிறது. இதனால் முகவர்கள் அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்