மதுபான கடைகள் செயல்படும் இடங்களை வகைப்படுத்த உத்தரவு

தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

Update: 2019-02-20 19:19 GMT
ஈரோடு மாவட்டம் மயிலம்பாடியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நல்லசாமி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்க விதிகளில் தடை ஏதும் இல்லை என அரசு வழக்கறிஞர் வாதிட்டார். கிராமப் புறங்களில் உள்ள இரண்டாயிரத்து 728 மதுபான கடைகள்  செயல்படும் நிலங்களை ந‌த்தம் புறம்போக்கு, தரிசு நிலம் என வகைப்படுத்தி புகைப்பட ஆதாரங்களுடன் மார்ச் 11-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்