164 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி ரயிலில் பயணிகள் பயணம் செய்து உற்சாகம்...

164 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி எஞ்சின் ரயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து மகிழ்ந்தனர்.;

Update: 2019-02-07 21:26 GMT
164 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி எஞ்சின் ரயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து மகிழ்ந்தனர். இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இயக்கப்பட்டு வந்த பழமை வாய்ந்த பாரம்பரிய நீராவி எஞ்சின் ரயில் நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே இயக்கப்பட்டது. இந்த இரயிலில் 40 பேர் மட்டுமே பயணம் செய்யலாம்.  இதில் பயணிக்க ஒருவருக்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த இந்த ரயிலில் பயணிப்பதற்காக மட்டுமின்றி பார்வையிடவும் ஏராளமானோர் இரயில் நிலையத்தில் திரண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்