மயிலாப்பூர் கோயில் சிலைகள் மாற்றப்பட்ட விவகாரம் : அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது செய்யபட்டார்.

Update: 2018-12-16 20:59 GMT
* கடந்த 2004 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சேதமடைந்த நிலையில் இருந்த மயிலுடன் கூடிய புன்னை வனநாதர், ராகு, கேது சிலைகளை மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் 3 சிலைகளும் மாற்றப்பட்டு புதிய சிலைகள் வைக்கப்பட்டன. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், பழைய சிலைகள் காணாமல் போனதாகவும் புகார்கள் எழுந்தன. 

* இது தொடர்பாக ரமேஷ் என்பவர்  தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டது. பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கடந்த 6 மாதங்களாக விசாரணை நடத்தி  சிலைகள் மாற்றப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை கண்டு பிடித்தனர்.  இது தொடர்பாக  அப்போதைய கோயில் துணை ஆணையரான திருமகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.   

* கடந்த 28 ந்தேதி முன்ஜாமின் கோரி திருமகள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானர். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை போலீசார் இன்று கைது செய்தனர்.  கும்பகோணத்திற்கு அழைத்து சென்று  நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர்.. நீதிபதியின் உத்தரவின் பேரில்,  இன்று நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்த உள்ளனர். 

* காஞ்சிபுரம் கோயில் சிலை முறைகேடு விவகாரத் தொடர்பாக 
அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கடந்த சிலமாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  
Tags:    

மேலும் செய்திகள்