ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி - ஸ்டாலின் கண்டனம்

தமிழக அரசிடம் கேட்காமல், காவிரி டெல்டாவில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-05 12:07 GMT
தமிழக அரசிடம் கேட்காமல், காவிரி டெல்டாவில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு, மக்களின் பெரும் போராட்டத்தை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். உடனடியாக இந்த திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 
இதே கருத்தை, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் வலியுறுத்தி உள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்