"ஹெல்மெட் கட்டாயம்" அரசாணை வெளியிட்டால் மட்டும் போதாது -உயர்நீதிமன்றம்

ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி அரசாணை வெளிட்டால் மட்டும் போதாது அதை நடைமுறைபடுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Update: 2018-08-21 10:23 GMT
மோட்டார் சட்ட விதிகளின் படி நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும், அதை அரசு அமல்படுத்தவில்லை என கோரி ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 2007-ல் அரசாணை வெளியிட்டதாக அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அரசாணை வெளியிட்டால் மட்டும் போதாது என்றும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.மேலும் இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து வரும் 23ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்