நெடுஞ்செழியன் முதல் கருணாநிதி வரை முக்கிய தலைவர்களின் இறுதி ஊர்வலத்திற்கு ஆம்புலன்ஸ் ஓட்டியதின் அனுபவம் குறித்து சொல்கிறார் சாந்தகுமார்

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சாந்தகுமார் "ஹோமேஜ்" என்ற இறுதி யாத்திரைக்கான உபகரணங்கள் வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

Update: 2018-08-09 13:51 GMT
* சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சாந்தகுமார் "ஹோமேஜ்" என்ற இறுதி யாத்திரைக்கான உபகரணங்கள் வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

* பிரபலமான தலைவர்கள் மறையும்போது, அவர்களின் உடலை எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டுவதை ஒரு கடமையாகவே செய்து வருகிறார் சாந்தகுமார்.

* காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம், சிஐடி காலனி, மற்றும் ராஜாஜி ஹாலுக்கு கருணாநிதி உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்றதை போல், 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் உடலை, அப்பலோவில் இருந்து போயஸ்தோட்டம், அங்கிருந்து ராஜாஜி ஹாலுக்கு எடுத்து சென்றவர் சாந்தகுமார்தான். 

* தமிழகத்தின் முதல்-அமைச்சர்களாக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா, ஆகியோரின் இறுதி பயணத்தில், லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்றது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக சாந்தகுமார் குறிப்பிடுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்