அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மீது சரமாரி தாக்குதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு ரோடு அருகே அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை மூன்று பேர் சரமாரியாக தாக்கிய சம்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-08-05 11:45 GMT
* கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு ரோடு அருகே அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை மூன்று பேர் சரமாரியாக தாக்கிய சம்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* சேலத்திலிருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை ஓட்டுநர் ஸ்ரீதர் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது அந்த வழியாக சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவரை ஓரமாக செல்லுமாறு கூறி   ஓட்டுநர் ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது.

* இதனால் ஆத்திரம் அடைந்த  இருசக்கர வாகனத்தில் வந்த  கவின் மற்றும் சந்திரன் ஆகிய இருவரும் பேருந்தை நிறுத்தி,  ஓட்டுநர் மற்றும் நடத்துனரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தனது நண்பர் பரமேஷ் என்பவரையும் போன் செய்து வரவழைத்து அவர்களை தாக்கி உள்ளனர்.

* தாக்கப் பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் பேருந்தை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து தகவலறிந்து அங்கு வந்த ஊத்தங்கரை போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட  மூவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

* பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கொடுத்த புகாரின் பேரில், அவர்கள் மூன்று பேர் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்பு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்