தமிழகத்தில் முதல் முறையாக பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமனம்...

தமிழகத்தில் முதல் முறையாக கோயில் அர்ச்சகராக பிராமணர் அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2018-07-31 14:08 GMT
கடந்த 2006 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியின் போது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் இயற்றப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கோயிலின் ஆகம விதிகளை பின்பற்றி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என உத்தரவிட்டது. இந்த உத்தரவு மெய்ப்பிக்கும் வகையில், மதுரையில் பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். அழகர்கோவிலின் உப கோவிலான தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில், அர்ச்சகராக அவர் பணி அமர்த்தப்பட்டுள்ளார். நேர்முகத் தேர்வின் போது, மந்திரங்களை மிகச் சரியாக உச்சரித்ததால், அவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்