காயத்ரி காளியம்மன் கோயிலின் ஆண்டு விழா - விழாவையொட்டி அரங்கேறிய ஆனந்த நடனம்

கும்பகோணத்தில் உள்ள திரெளபதி அம்மன் மற்றும் காயத்ரி காளியம்மன் கோயில்களில் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது

Update: 2018-07-24 15:09 GMT
* கும்பகோணத்தில் உள்ள திரெளபதி அம்மன் மற்றும் காயத்ரி காளியம்மன் கோயில்களில் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 21 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநடன விழா இன்று நடைபெற்றது. 

* இதில் பாரம்பரிய முறைப்படி பட்டு சேலை, மாலை, தேங்காய், பழங்களுடன் சீர்வரிசை தட்டுக்களுடன் பெண்கள் ஊர்வலம் சென்றனர். 

* பின்னர் அப்பகுதியில் காயத்ரி காளியம்மனின் ஆனந்த நடனம் நீண்ட நேரமாக நடைபெற்றது.

* நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோயிலில் ஆடித் தபசு விழாவின், ஏழாம் திருநாளையொட்டி, பூப்பல்லக்கில் கோமதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. 

* கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடித்தபசு திருவிழா, தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுகிறது. 

*விழாவின் ஏழாம் நாளான நேற்று, முக்கிய வீதிகளில் மங்கள வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் அம்மன்  பூப்பல்லக்கு வீதி உலா நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்