தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

ஆணையம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன, தடை விதிக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு நிதி ஒதுக்குவதா எனவும் கேள்வி;

Update: 2018-07-19 07:24 GMT
புதிய தலைமை செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணைய விசாரணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த திமுக, 2015-ல் தடை  உத்தரவு பெற்றது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2015-ல் தடை விதிக்கப்பட்ட விசாரணை ஆணையத்துக்கு மூன்று ஆண்டுகளாக நிதி ஒதுக்கி வருவது குறித்து நீதிபதி கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட ஆணையத்துக்கு நிதி ஒதுக்கி, அரசு பணத்தை வீணடிப்பதாக என நீதிபதி கண்டனம் தெரிவித்தார். முறைகேடு புகார்கள் இருந்தால், லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிடாமல், ஆணையம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன எனவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.
Tags:    

மேலும் செய்திகள்