சுற்றுச்சூழலை பாதுகாக்க கொரிய மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
இந்தியா வந்துள்ள 113 கொரிய மாணவர்கள், காட்டரம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டனர்.;
ஸ்ரீபெரும்புதூர் அருகே சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி கொரிய மாணவர்கள் தமிழில் கோஷம் எழுப்பியவாறு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். அறக்கட்டளை சார்பாக சமூக பணிகளில் ஈடுபடுவதற்காக இந்தியா வந்துள்ள 113 கொரிய மாணவர்கள், காட்டரம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டனர்.