ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டியில் இன்று சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதவுள்ள நிலையில் இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் கேப்டன் தோனி பயிற்சி மேற்கொண்டார். இதேபோல் சென்னை அணி வீரர்கள் சமீர் ரிஸ்வி, ஜடேஜா உள்ளிட்டோரும் பயிற்சியில் ஈடுபட்டனர். குஜராத் அணியில் விஜய் சங்கர் உள்ளிட்டோர் பயிற்சியில் கலந்துகொண்டனர். பயிற்சியின்போது குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டன் உடன் தோனி கலந்துரையாடினார்