அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு - விளக்கமளிக்க உத்தரவு
அரசு மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது;
அரசு மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பார்த்திபன், குரூப்-ஒன் அதிகாரிகளுக்கு இணையாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறினார்கள். அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் இரண்டு மருத்துவர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் இதுகுறித்து இரண்டு வார காலத்திற்குள் அரசு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.