தான் எங்கு சென்றாலும் சேப்பாக்கத்தின் செல்லப் பிள்ளை என்று மக்கள் தன்னை அழைப்பதாக அமைச்சர் உதயநிதி பெருமிதம் தெரிவித்தார்... சென்னை கொய்யா தோப்பில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 61 கோடியே 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 324 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்டப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டித் துவக்கி வைத்தார்... இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பரசன், சேகர்பாபு , நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி, மக்கள் கோரிக்கையின் படி தான் அளித்த தேர்தல் வாக்குறுதியாக புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தருவதற்கான பணிகள் துவங்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்...