காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;
- 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்... ஒவ்வொரு இந்தியருக்கும் குறைந்த விலையில் உயர்தர மருத்துவம் அளிக்க உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் மோடி திட்டவட்டம்...
- எலக்ட்ரிக் ஆம்பலன்ஸ், எலக்ட்ரிக் டிரக் வாங்குவதற்கான பி.எம். இ-டிரைவ் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்... 10 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு திட்டத்தை செயல்படுத்த முடிவு.....
- ஜம்மு கஷ்மீரில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்... சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் 5 கேரண்டிகளை வெளியிட்டது காங்கிரஸ்...
- அரசு அலுவலகங்களில் நடக்கும் தவறை பதிவு செய்வதற்காக ரகசிய கேமரா பயன்படுத்துவது குற்றம் அல்ல.... கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.....
- கோவை கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்பினருடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை.... வெவ்வேறு விதமான ஜிஎஸ்டி விதிப்பால், பில் அடிக்கும்போது கம்ப்யூட்டரே திணறுவதாக தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் சீனிவாசன் தெரிவித்த கருத்தால் சிரிப்பலை..
- கர்நாடகாவின் மாண்டியாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது கலவரம்.... கற்களை வீதி தாக்குதல்.... கடைகளுக்கு தீ வைப்பு.... 144 தடை உத்தரவு பிறப்பிப்பு....
- சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆய்வின்போது தவறான தகவல் கூறிய வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட்... மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து தவறான தகவல் அளித்ததால் ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு...
- தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கான தேதியை இன்று அறிவிக்கிறார் நடிகர் விஜய்......திட்டமிட்டபடி விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த முடிவு என்றும் தகவல்....
- ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் வேலூர் மத்திய சிறையில் 8 மணி நேரத்திற்கும் மேலாக சிபிசிஐடி விசாரணை... சிறைத்துறை டிஐஜி உள்ளிட்டோரை விசாரிக்க திட்டம்....
- திமுகவை மிரட்ட, திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்... மத்திய இணை அமைச்சர் எல் முருகன் விமர்சனம்...
- மதுவிலக்கு தொடர்பாக தேசிய கொள்கையை வரையறுக்க மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்........... மது ஒழிப்பு மாநாடு திமுகவை மிரட்டவோ, அதிமுகவோடு கூட்டணி வைக்கவோ இல்லை என்றும் விளக்கம்.....
- நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம்... அக்டோபர் 31-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு...
- 2026 கால்பந்து உலகக்கோப்பை தகுதி சுற்றில் பிரேசில் அதிர்ச்சி தோல்வி. பாராகுவே அணி, 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அபாரம்....