அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவிற்கு செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜயவாடா செல்லும் அவர், அங்குள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்திற்கு சென்று அம்மனை தரிசிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து, திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்தப்பின், இரவே விமானம் மூலம் சென்னை திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயவாடா நகரத்தில், கிருஷ்ணா நதியோரத்தில், இந்திரநீலாத்திரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள துர்கை அம்மன் ஆலயம், மிகவும் சக்தி வாய்ந்த கோவில் எனவும், நினைத்தது நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கை.