தபால் ஓட்டு.. வெளியான புதிய விதிமுறை | Postal Ballots | Election 2024

Update: 2024-03-02 16:15 GMT

முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் ஓட்டு போடுவதற்கான வயது வரம்பை, 80ல் இருந்து 85ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்று திறனாளிகள், தபால் ஓட்டு போடும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியிருந்த‌து. இந்நிலையில், தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்த மத்திய அரசு, மக்களவைத் தேர்தலில், தபால் ஓட்டு போடும் வயது வரம்பை 80ல் இருந்து 85 ஆக உயர்த்துவதாக அறிவித்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் 80 வயதுக்கு மேற்பட்டோரில் 2 முதல் 3 விழுக்காட்டினர் மட்டுமே தபால் ஓட்டு முறையை பயன்படுத்தியதாகவும், 98 விழுக்காட்டினர் வாக்கு மையங்களுக்கு சென்றுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோர் ஒரு கோடியே 75 லட்சம் பேர் உள்ள நிலையில், தற்போது வயது வரம்பு 85ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், 77 லட்சம் பேருக்கு மட்டுமே, தபால் ஓட்டு முறையை பயன்படுத்துவதற்கு தகுதியானவர்களாவர். 85 வயதுக்கு உட்பட்ட அனைவரும், வாக்கு மையங்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்