பணமாலை அணிவித்து வரவேற்கப்பட்ட...பாஜக வேட்பாளர் பால் கனகராஜ்

Update: 2024-04-14 08:18 GMT

வடசென்னை பா.ஜ.க. வேட்பாளர் பால் கனகராஜ் சென்னை, தண்டையார்பேட்டை பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை பகுதிகளில் வீதி, வீதியாக தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. வேட்பாளர் பால் கனகராஜ்க்கு பண மாலை மற்றும் கிரீடம் அணிவித்தும் பிரமாண்ட தாமரை மலர் வழங்கியும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்பகுதி பெண்கள் மலர்கள் தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்ட பா.ஜ.க. வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து பிரதமர் மோடியின் முகமூடி அணிந்து பெண்கள் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்