கேரள சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 7ம் தேதி துவங்க உள்ள நிலையில், கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கட் கிழமை, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவை ஒத்திவைக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 11 மற்றும் 18 ஆகிய தேதிகள் அதிகாரப்பூர்வமற்ற விஷயங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசரச் சட்டத்தை மாற்றுவதற்கான மசோதா, கூட்டுறவுச் சட்டத் திருத்த மசோதா போன்றவை இந்தக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும். ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சபை கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது