`என் அப்பா, அம்மாவ ..` - கெஜ்ரிவால் போட்ட ட்வீட்.. பற்றி எரியும் டெல்லி

Update: 2024-05-23 06:05 GMT

வியாழன்று எனது வயதான பெற்றோரை டெல்லி காவல்துறை விசாரிக்க வருகை தர இருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எந்த வழக்கு தொடர்பாக போலீஸ் பெற்றோரை விசாரிக்க இருக்கின்றனர் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை என்றாலும் ஆம் ஆத்மி எம்பி சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.

85 வயதாகும் கெஜ்ரிவாலின் தந்தை மற்றவரின் உதவியின்றி நடக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அவரது தாயும் சில நாட்களுக்கு முன்புதான் நீண்ட காலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பிறகு வீடு திரும்பியிருப்பதாகவும் அவரது பெற்றோர்கள் சுவாதி மாலிவாலுக்கு எதிராக கையை ஓங்கி இருப்பார்கள் என பா.ஜ.க. கருதுகிறதா என டெல்லி மாநில நிதியமைச்சர் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்