கங்கனாவுக்கு பளார் விட்ட போலீசுக்கு ஆதரவாக இறங்கிய பிரபல தமிழ் இயக்குநர்
கங்கனாவுக்கு பளார் விட்ட போலீசுக்கு ஆதரவாக இறங்கிய பிரபல தமிழ் இயக்குநர்
சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பி. கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலருக்கு, திரைப்பட இயக்குநர் சேரன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பெண் காவலரின் அடி வாக்களித்த மக்களுக்காக அடிக்கப்பட்டது என்றும், விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்காக அறைந்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். சேரனின் இந்த கருத்துக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஒரு விஷயத்தின் உட்பொருள் தெரியாமல் தான் சார்ந்த கட்சியின் மேல் கொண்ட பற்றால், அநாகரீகமாக கருத்துக்கள் பதிவிடும்வரை யாரும் முன்னேற போவதில்லை என சேரன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.