அமைச்சர் உதயநிதிக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி புத்தகங்களை அனுப்பிய பாஜக நிர்வாகிகள்..

Update: 2023-08-28 16:26 GMT

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு IAS, IPS , TNPSC தேர்வு பயிற்சி புத்தகங்களை, மதுரையில் இருந்து, பாஜகவினர் அனுப்பி வைத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். அதற்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் IAS, IPS, TNPSC தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று விட்டு பேசட்டும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள பாஜக நிர்வாகிகள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு IAS, IPS, TNPSC தேர்வு பயிற்சி புத்தகங்களை, தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்