வருமான உச்ச வரம்பு நிர்ணய விவகாரம் - ரூ.25 லட்சமாக வரம்பை உயர்த்த தி.மு.க. கோரிக்கை

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வருமான உச்ச வரம்பை உடனடியாக 25 லட்சமாக உயர்த்த வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.

Update: 2020-12-03 11:50 GMT
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வருமான உச்ச வரம்பை உடனடியாக 25 லட்சமாக உயர்த்த வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்டுக்கு, தி.மு.க. மக்களவை குழுத் தலைவர் டி ஆர் பாலு எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு சலுகைகளை பெற இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்களின் ஆண்டு வருமானம் அளவின் உச்சவரம்பு தொகையை மத்திய அரசு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டும்  என்ற விதியை என்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.  ஆனால் மத்திய அரசு இதுவரை வருமானம் தொடர்பா னபுதிய உச்ச வரம்பை நிர்ணயிக்க காலம் தாழ்த்துவதாக கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.  மாற்றியமைக்கப்பட்ட வருமான உச்ச வரம்பை விரைந்து  நிர்ணயம் செய்வதோடு, தற்போதைய பொருளாதார நிலை,  விலைவாசி  மற்றும் பணவீக்கம் அடிப்படையில்,   உச்ச வரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என டி.ஆர். பாலு வலியுறுத்தி உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்