"திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை : முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்"

கரூர் திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

Update: 2020-01-31 23:24 GMT
கரூர் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். வீடுகளில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படாத நிலையில், ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள செந்தில்பாலாஜி அலுவலகத்தில் இருந்து இரண்டு பெட்டிகளில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை போக்குவரத்துதுறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தபோது, அந்த துறையில் வேலை வாங்கி தருவதாக பல்வேறு நபர்களிடம் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக  மத்திய குற்றப்பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்தனர். இதனால், செந்தில்பாலாஜிக்கு, சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை செய்த போலீசார், சென்னை மந்தைவெளி இல்லத்தை பூட்டி சீல் வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்