பாஜக, காங். அல்லாத 3வது அணி : சந்திரசேகர ராவ் திட்டம் என்ன...?

தேசிய அளவில் மூன்றாவது அணி, பாஜகவிற்கு சாதகமாக அமையும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் சந்தித்து பேசியுள்ளார்.

Update: 2018-12-27 03:11 GMT
தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் காங்கிரஸின் மெகா கூட்டணியை வீழ்த்திய கையோடு நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகிறார், சந்திரசேகரராவ்....பாஜக, காங்கிரஸ் இல்லாத மூன்றாது அணி என்ற முழக்கத்தோடு தனது பயணத்தை சந்திரசேகரராவ் தொடங்கியுள்ளார். காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட மம்தா பானர்ஜி, பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை இப்போது அறிவிப்பது பொருத்தமல்ல என தனது அதிருப்தியை வெளியிடுத்தியுள்ளார். இந்த நிலையில், கொல்கத்தா சென்ற சந்திரசேகர ராவ், 3வது அணி குறித்து மம்தா பானர்ஜியிடம் ஆலோசனை நடத்தினார்.இதற்கிடையே, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கையும் சந்தித்து சந்திரசேகர ராவ் ஆதரவு கோரி யிருக்கிறார். ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற நவீன் பட்நாயக் விரும்புகிறார் என்பது அவரது கட்சியை சேர்ந்த எம்.பி. Soumya Ranjan Patnaik சந்திரபாபு நாயுடுவிற்கு எழுதிய கடிதம் மூலம் தெரிகிறது. இந்த நிலையில் சந்திரசேகர ராவின் முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், விரைவில் அவரை சந்திக்க உள்ளதாகவும் கூறியிருக்கிறார். இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியையும் சந்திக்க சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார். 3வது அணி அவர்களின் துணை அணி, இவர்களின் துணை அணி என பாஜகவும், காங்கிரஸும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், 3வது அணி உருவாக காரணமே ஸ்டாலின் தான் என்கிறார், தமிழக பாஜக தலைவர் தமிழிசை 3வது அணி பாஜகவுக்கு சாதகமாக அமையும் என விமர்சிக்கப்படும் நிலையில், பிரதமர் மோடியை சந்திரசேகரராவ் நேற்று சந்தித்து பேசியது பெரும் விவாத பொருளாக மாறியிருக்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்