"நீட் தேர்வால் தகுதியற்ற டாக்டர்களை உருவாக்குகிறோம்" - மக்களவையில் டாக்டர் அன்புமணி குற்றச்சாட்டு

நீட்தேர்வு எதற்காக கொண்டு வரப்பட்டதோ, அந்த அடிப்படையே தகர்ந்து போய் விட்டதாக பாமக உறுப்பினர் டாக்டர் அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளார்.

Update: 2018-08-02 15:42 GMT
நீட்தேர்வு எதற்காக கொண்டு வரப்பட்டதோ, அந்த அடிப்படையே தகர்ந்து போய் விட்டதாக பாமக உறுப்பினர் டாக்டர் அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளார். நாடாளுமன்ற மக்களவையில், நேரமில்லா நேரத்தில் , நீட் பிரச்சினையை எழுப்பிய தர்மபுரி உறுப்பினர் டாக்டர் அன்புமணி, 
அரசு எத்தகைய மாணவர்களை டாக்டர் ஆக்க விரும்புகிறது என
கேள்வி எழுப்பினார். பல்வேறு புள்ளிவிவரங்களை பட்டியலிட்ட 
டாக்டர் அன்புமணி, நீட் தேர்வால் தகுதி இல்லாத டாக்டர்களை தான், நாம் உருவாக்குகிறோம்  என்றார், மொத்தத்தில், மருத்துவ கல்வி வணிக மயமாகி விட்டதாக டாக்டர் அன்புமணி குற்றஞ்சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்