உத்தராகண்டில்ருத்ர தாண்டவமாடிய மழை- பள்ளத்தாக்கில் சிக்கிய மக்கள் -வெளியானது பரபரப்பு மீட்பு காட்சி
உத்தராகண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்
கனமழை காரணமாக சாலைகள், தரைப் பாலங்கள்,
மின்சாரம், குடிநீர் இணைப்புகள், விவசாய நிலங்கள்
பெரிய அளவில் சேதமடைந்துள்ளன. கனமழையால்
இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர், 10 பேர்
காயமடைந்துள்ளனர். கேதார்நாத்தில் இருந்து 2
ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதுகாப்பாக
வெளியேற்றப்பட்டுள்ளனர். கேதார் பள்ளத்தாக்கில்
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள
இந்திய விமானப்படை ஒரு சினூக் மற்றும் எம்.ஐ
ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளது.