நொடி பொழுதில் பற்றிய பரபரப்பு... தரையோடு மோதி தீயை கக்கிய விமானம்...பதைபதைக்கும் காட்சி

Update: 2024-05-09 09:06 GMT

துருக்கியில் கியர் செயலிழந்ததால் ஓடுதளத்தில் தரையிறங்கிய சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. FedEx நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 767 ரக சரக்கு விமானம் ஒன்று, தரையிறங்கும் கியர் செயலிழந்ததால், அவசர அவசரமாக இஸ்தான்புல் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. முன்பக்க கியர் இல்லாமல், பின்பக்க தரையிறங்கும் கியரால் மட்டுமே விமானம் இறக்கப்பட்ட நிலையில், விமானத்தின் முன்பகுதி தரையுடன் மோதி தீப்பொறிகள் ஏற்பட்டன. இந்த விபத்தில் விமானத்தின் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், துருக்கி போக்குவரத்துத்துறை அமைச்சர் அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்