சபரிமலையின் 18ம் படியில் திடீர் மாற்றம்... பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலையில் பதினெட்டாம் படி கல் அருகே பக்தர்களுக்கு இடையூறாக இருந்த தூண்கள் இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மண்டல பூஜைக்கு முன்னதாகவே கல்தூண்கள் முழுவதுமாக இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. பதினெட்டாம் படி ஏறும் பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருப்பதற்கும், பக்தர்கள் படியேறுவதற்கு உதவும் போலீசார் தங்களின் பணியை சரியாக மேற்கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.