இந்திய மற்றும் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை இரண்டாவது நாளாக மீண்டும் தொடங்கியது. இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு நாகையில் இருந்து பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. போதிய பயணிகள் முன்பதிவு செய்யாத காரணத்தினால், திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்களுக்கு மட்டும் போக்குவரத்து சேவை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்றைய தினம் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது. இதனிடையே, இச்சேவை வரும் 23-ஆம் தேதி வரை மட்டும் தொடரும் என்றும், அடுத்ததாக மழை காலத்திற்கு பிறகு ஜனவரி மாதம் முதல் மீண்டும் கப்பல் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.