58-வது நாளாக வெகுவாக குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு

நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து 93.38சதவீதமாக உள்ளது.;

Update: 2021-06-05 06:12 GMT
நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து 93.38சதவீதமாக  உள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி,  நேற்று ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 529 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 86 லட்சத்து 94ஆயிரத்து 879ஆக  உயர்ந்துள்ளது.

3 ஆயிரத்து 380 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்து 44 ஆயிரத்து 82 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 894 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், 15 லட்சத்து 55ஆயிரத்து 248 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுவரை 22 புள்ளி 78 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்