12 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு - மத்திய அரசு தகவல்

சத்தீஸ்கர், அரியானா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், குஜராத், உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநில பண்ணைகளில் உள்ள பறவைகளுக்கு காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்ட உள்ளது.

Update: 2021-01-24 06:29 GMT
சத்தீஸ்கர், அரியானா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், குஜராத், உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநில பண்ணைகளில் உள்ள  பறவைகளுக்கு  காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்ட உள்ளது.இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 12 மாநிலங்களில் காகம், இடம்பெயர்ந்த மற்றும் காட்டு பறவைகளில் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட் மற்றும் கேரளாவில் உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசால் அழிக்கப்பட்ட பண்ணை பறவைகள், முட்டைகள் மற்றும் பண்ணை தீவனங்களுக்கான இழப்பீடு, அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்கள் உள்ளிட்டவை மூலமும், தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.பறவை காய்ச்சல் தயார்நிலை, கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான திருத்தப்பட்ட செயல்திட்டத்தின் படி தாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தினமும் தகவல்களை வழங்கி வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்