கேரள தங்கம் கடத்தல் வழக்கு - வலுக்கும் போராட்டங்கள்

கேரள தங்க கடத்தல் விவகாரத்தை தொடர்ந்து, முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன.

Update: 2020-07-13 12:22 GMT
கேரள தங்க கடத்தல் விவகாரத்தில், முதலமைச்சரின் செயலாளர் சிவசங்கரனுக்கு தொடர்பு இருப்பதாகவும், முக்கிய குற்றவாளிகள் தலைமை செயலக செல்வாக்கை பயன்படுத்தி உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதையடுத்து அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன . சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்ற கோரவும் திட்டமிட்டுள்ளன.

கேரள சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 140  இடங்களில்,  மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி  கூட்டணிக்கு 91 இடங்கள் உள்ளன. இந்த நிலையில்  நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெறாது என தெரிந்தும், அரசுக்கு நெருக்கடி தர எதிர்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே கேரள முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ், பாஜக, முஸ்லீம் லீக் கட்சியினர் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.




Tags:    

மேலும் செய்திகள்