பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள் இணைப்பு: ஒரே நிறுவனமாக பங்குச் சந்தையில் பட்டியலிட திட்டம்

நேஷனல் இன்ஷூரன்ஸ், ஓரியன்டல் இன்ஷூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் ஆகியவற்றை இணைத்து ஒரே நிறுவனமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.;

Update: 2020-03-11 19:02 GMT
நேஷனல் இன்ஷூரன்ஸ், ஓரியன்டல் இன்ஷூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் ஆகியவற்றை இணைத்து ஒரே நிறுவனமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களை இணைக்கும் நடவடிக்கைகள் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களில் இந்த ஆண்டு மே மாதத்துக்குள் இது தொடர்பான முடிவினை மத்திய அமைச்சரவை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களை இணைப்பது தொடர்பான அறிவிப்பு 2018 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையின் போது அறிவிக்கப்பட்டது. இணைப்புக்கு பின்னர்  புதிய நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடவும் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்