"ரயில் கட்டணங்களில் மாற்றமில்லை " - பியூஷ் கோயல்
மத்திய இடைக்கால பட்ஜெட்டில், ரயில்வே துறைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.;
ரயில் கட்டண மாற்றம் செய்யப்படாத நிலையில், ரயில்வே திட்டங்களுக்கு ஒரு லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக பியூஷ் கோயல் கூறினார். அனைத்து ஆளில்லா லெவல் கிராஸிங்குகளும் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், உள்நாட்டிலேயே தயாரான 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' விரைவு ரயில், இந்தியப் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தைக் கொடுக்கும் என்றும் குறிப்பிட்டார். நடப்பு நிதியாண்டில் நிதி மேலாண்மை 96 புள்ளி 2 சதவீதமாக மேம்பட்டுள்ளது என்றும் பியூஷ் கோயல் கூறினார்.