மணிப்பூர் பல்கலைக் கழகத்தின் தற்காலிக துணைவேந்தரை கண்டித்து - மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்
இம்பாலில் செல்போன் மற்றும் இணைய சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.;
மணிப்பூர் பல்கலைக் கழகத்தின் தற்காலிக துணைவேந்தரை கண்டித்து, அதன் தலைநகர் இம்பாலில் மாணவர்கள் உண்ணாவிரதம், பேரணி உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். துணைவேந்தர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, இம்பாலில் செல்போன் மற்றும் இணைய சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.