"வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்ப ஆதார் கட்டாயமில்லை" - இந்திய அஞ்சல் துறை

அஞ்சல் துறை மூலமாக சர்வதேச பார்சல் அல்லது சர்வதேச ஈ.எம்.எஸ் எனப்படும் சரக்குகள் அனுப்ப பதிவு செய்யும்போது ஆதார் கட்டாயமில்லை என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

Update: 2018-09-11 12:25 GMT
அஞ்சல் துறை மூலமாக சர்வதேச பார்சல் அல்லது சர்வதேச ஈ.எம்.எஸ் எனப்படும் சரக்குகள் அனுப்ப பதிவு செய்யும்போது ஆதார் கட்டாயமில்லை என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக, பார்சல் அனுப்புபவர்களின் அடையாள அட்டை கட்டாயம் எனவும் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் போன்ற ஏதேனும் ஒன்றை அளிக்கலாம் எனவும் கூறியுள்ளது. பார்சல்களின் மீது ஆதார் எண் எழுதப்பட வேண்டும் என வெளியான தகவலையும் அஞ்சல் துறை மறுத்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்