ஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் அளித்தது உச்சநீதிமன்றம்; ஓரினச்சேர்க்கையாளர்கள் கொண்டாட்டம்

"ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டப் பிரிவு 377 ரத்து" - தீர்ப்பால் ஓரினச்சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சி

Update: 2018-09-06 06:36 GMT
இயற்கைக்கு முரணான பாலியல் உறவை குற்றம் எனக் கூறும், இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவை ரத்து செய்து கடந்த 2009-ஆம் ஆண்டு, டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்த தீர்ப்பிற்கு எதிராக 2013ம் ஆண்டு தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததோடு ஓரினசேர்க்கைஉள்ளிட்ட இயற்கைக்கு எதிரான பாலியல் உறவு விஷயங்களுக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு 377ஐ மீண்டும் உறுதி செய்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு  ஓரினச்சேர்க்கையை குற்றமாக்கும் 377-வது சட்டப்பிரிவை ரத்து செய்வதாக நேற்று தீர்ப்பளித்தது.




ஓரினச்சேர்க்கை தீர்ப்பு - கமல் வரவேற்பு
   'ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது" என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். அடிப்படை உரிமைகளை மதிக்கும் குடிமக்கள் சார்பாக எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தனது சமூக வலைதள பக்கத்தில் கமல் பதிவிட்டுள்ளார்.

ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்ற தீர்ப்பிற்கு வரவேற்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு - குஷ்பு 
   ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர்களின் உரிமை அவர்களுக்கு கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரின சேர்க்கை குற்றம் அல்ல - நடிகை திரிஷா வரவேற்பு
   ஒரின சேர்க்கை குற்றம் தீர்ப்பினால் சம உரிமைக்கான வழியில் செல்ல முடியும் என நடிகை திரிஷா தமது சமூக வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சட்டப்பிரிவு 377 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை வரவேற்று, JaiHO என திரிஷா பதிவிட்டுள்ளார். 




Tags:    

மேலும் செய்திகள்