குப்பைகளில் இருந்து மீத்தேன் உற்பத்தி சாதித்து காட்டிய பொறியியல் கல்லூரி மாணவர்கள்

குப்பைகளில் இருந்து மீத்தேன் உற்பத்தி சாதித்து காட்டிய பொறியியல் கல்லூரி மாணவர்கள்;

Update: 2018-06-24 07:36 GMT
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காடூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் விஸ்வநாதன் மற்றும் அஜீத் குமார்... தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களான இருவரும், தங்களது இறுதி ஆண்டு புராஜெக்ட்டாக குப்பைகளில் இருந்து மீத்தேன் எடுக்கும் சாதனத்தை உருவாக்கி சாதித்துள்ளனர். இவர்களது படைப்பை கண்டுவியந்த மக்கள் மாணவர்களை பாராட்டி வருகின்றனர். 

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த சாதனத்திற்கு மின்சார செலவு கூட இல்லை... ஏனென்றால், இந்த சாதனம் சூரிய ஒளி மின்சக்தியால் இயங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் ஒரே நேரத்தில் நான்கு கிலோ குப்பைகளை பயன்படுத்த முடியும்... தங்களது படைப்பிற்கு காப்புரிமை கோரும் மாணவர்கள், அரசின் உதவி கிடைத்தால், மேலும் சிறப்பாக சாதனத்தை உருவாக்குவோம் என்கின்றனர்.

மாணவர்களின் முயற்சிக்கு அங்கீகாரம் அளித்து, சாதனத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவந்து, விளைநிலங்களை பாதுகாக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்