இந்தியாவின் மாநிலங்களை கூறும் ஒன்றரை வயது சிறுவன்
பதிவு: ஜூன் 10, 2018, 01:39 PM
பெங்களூருவை சேர்ந்த ஒன்றரை வயது சிறுவன் ஒருவன் இந்தியா வரைபடத்தில் உள்ள அனைத்து மாநிலங்களையும் தனது கையை காட்டி கூறும் வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வருகிறது. கோளார் பகுதியை சேர்ந்த அம்ரித் கிருஷ்ணா என்ற ஒன்றரை வயது சிறுவன் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் வரைபடத்தை பார்த்து கூறியது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இவனது புத்தி கூர்மையை அனைவரும் பாரட்டி வருகின்றனர். இவனுக்கு உலக சாதனையாளர் சான்றிதல் கிடைத்துள்ளது.