அவர் உருவம் பாரு எளிமை... பத்ரிநாத் கோவிலில் சூப்பர் ஸ்டார் சாமி தரிசனம்

Update: 2023-08-13 07:15 GMT

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளிவந்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்குச் சென்ற அவர், தயானந்த சுவாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டார். மேலும் அங்குள்ள துறவிகளிடம் மனம் விட்டு பேசி்னார். பின்னர், சிறிது நேரம் அங்கு அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதே போன்று, பத்ரிநாத் கோயிலுக்கும் சென்று ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். அங்கு, ரஜினிகாந்த்திடம் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்