விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி?

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை
விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி?
x
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. டெஸ்ட் தொடரை இந்தியா வென்ற நிலையில், பழி தீர்க்கும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் களமிறங்குகிறது. போட்டிக்காக இரு அணி வீரர்களுமே  சிட்னியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டெஸ்ட் தொடரில் சோபிக்க தவறிய ஆரோன் பிஞ்ச் தான், ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துகிறார்.  மேக்ஸ்வல், ZAMPA உள்ளிட்ட வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர். CUMMINS, STARC, HAZELWOOD ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு வேகப்பந்துவீச்சாளர் பீட்டர் சிடில் விளையாடுகிறார். தொடக்க ஆட்டக்காராக விக்கெட் கீப்பர் ALEX CARREY களமிறங்குகிறார். இந்திய அணியை பொறுத்தவரை தோனி, தவான், ராயுடு, ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் திரும்பி உள்ளதால் பலம் பெற்றுள்ளது. வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை புவனேஸ்வர் குமார், கலில் அகமது, சிராஜ் ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளது. குல்தீப் மற்றும் சாஹல் என 2 சூழற்பந்துவீச்சாளர்களும் அணியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா விளையாடிய கடைசி 20 ஒருநாள் போட்டியில் மூன்றில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் ஆஸ்திரேலியா மீண்டும் பலம் பெறுமா இல்லை இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நாளை இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது. 

ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை :

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்ற இவ்விரு கிரிக்கெட் வீரர்களும், பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தனர். இது குறித்து விளக்கம் அளிக்கும்படி இரு வீரர்களுக்கும் பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் போட்டியில் பங்கேற்க பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழு தடை விதித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய பின்பே தடையை நீட்டிப்பதா அல்லது  நீக்குவதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழு விதித்துள்ள தடையால் ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது. 

ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடையால், இந்திய அணி நிச்சயம் பாதிக்கும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். சிட்னியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹர்திக் பாண்டியா போன்ற ஆல் ரவுண்டர் இல்லை என்றால் அதனை ஈடு கட்ட சில மாற்றங்களை அணியில் செய்வது அவசியம் என்றார். இதனால் அணிக்கு பாதிப்பு என்றாலும், நடந்ததை மாற்ற முடியாது என்று கோலி குறிப்பிட்டார். சூழ்நிலை எப்படி இருந்தாலும், போட்டியில் வெற்றிக்காக போராடுவோம் என்று கோலி தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்