விளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை
பதிவு : ஜனவரி 07, 2019, 09:00 PM
மாற்றம் : ஜனவரி 08, 2019, 08:37 PM
விளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது
விளையாட்டு திருவிழா - (07.01.2019)

தொடர் நாயகன் விருது வென்ற புஜாரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 622 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா, 300 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி 'பாலோ-ஆன்' ஆனது. 322 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 6 ரன் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 5ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து, இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2க்கு ஒன்று என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. 

ஆசிய கோப்பை கால்பந்து தொடர் : தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல்

ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி  4 - 1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியின் ஆட்டத்தின் 26 வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை இந்திய அணியின் சுனில் செட்டரி, கோலாக மாற்றினர். ஆட்டத்தின் 31 வது நிமிடத்தில் தாய்லாந்து அணியின் கேப்டன் தீரசில் டாங்டா ஒரு கோல் அடிக்க, ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.விறுவிறுப்பான இரண்டாவது பாதியில்  அதிரடியாக விளையாடி இந்தியா அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்தது.இதனையடுத்து 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.இந்தப் போட்டியில் 2 கோல்கள் அடித்தன் மூலம் சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை சுனில் செத்றி முந்தினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.