விளையாட்டு திருவிழா - (04.01.2019) : ஆஸி.க்கு எதிரான கடைசி டெஸ்ட் இந்திய அணி 622 ரன்கள் குவிப்பு
பதிவு : ஜனவரி 04, 2019, 09:52 PM
விளையாட்டு திருவிழா - (04.01.2019) : இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர்
விளையாட்டு திருவிழா - (04.01.2019) : 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. சிட்னியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு  303  ரன்கள் என்ற ஸ்கோருடன் 2வது நாள் ஆட்டத்தை இந்தியா தொடர்ந்தது. சிறப்பாக விளையாடிய புஜாரா 193 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர் என்ற டிராவிட்டின் சாதனையை புஜாரா முறியடித்தார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட், ஜடேஜா ஜோடி அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தது. ஜடேஜா 81 ரன்களில் வெளியேற, ரிஷப் பண்ட் 159 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார். 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் இந்தியா எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 3 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருப்பதால், போட்டி டிராவை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி டிரா ஆகினால் இந்தியா 2க்கு1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும். 

ஹோப்மன் கோப்பை டென்னிஸ் தொடர்
ஹோப்மன் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு சுவிட்சர்லாந்து அணி தகுதி பெற்றது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற லீக் சுற்றில் சுவிட்சர்லாந்து அணியும், கிரிஸ் அணியும் மோதின. ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர், 7க்கு6, 7க்கு6 என்ற நேர் செட் கணக்கில் கிரீஸ் வீரர் STEFANOS-ஐ வீழ்த்தினார். மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கிரீஸ் வீராங்கனை சக்காரியை எதிர்கொண்ட சுவிட்சர்லாந்தின் BELINDA 3க்கு6, 4க்கு6 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார். கலப்பு இரட்டையர் பிரிவில், ஃபெடரர், BELINDA ஜோடி, கிரிஸ் நாட்டின் STEFANOS,சக்காரியிடம் தோல்வியை தழுவியது.

பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர் : அரையிறுதிக்கு நிஷிகோரி தகுதி
பிரிஸ்பேன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு நட்சத்திர ஜப்பான் வீரர் நிஷிகோரி தகுதி பெற்றார். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில், பல்கேரிய வீரர் டிமிட்ரோவை எதிர்கொண்ட நிஷிகோரி, 7க்கு5, 7க்கு5 என்ற செட் கணக்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 

சிறந்த கால்பந்து வீரர் விருது வென்ற ரொனால்டோ
துபாயில் நடைபெற்ற கால்பந்திற்கான 'GLOBE SOCCER AWARDS'ன், 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர் விருதை கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றுள்ளார். 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த கோல் விருதையும் ரொனால்டோ தட்டி சென்றார்.  சிறந்த பயிற்சியாளர் விருதை உலககோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் DIDIER DESCHAMPS -க்கு வழங்கப்பட்டது. 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பண்டை புகழ்ந்து இந்திய ரசிகர்கள் மைதானத்தில் பாடல் ஒன்றை பாடினர்.  ஆஸ்திரேலியாவை கிண்டல் செய்யும் வகையில் இந்த பாடல் அமைந்தது.

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர்
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் நடப்பு சீசனில் லிவர்புல் அணி முதல் தோல்வியை தழுவியது. மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள லிவர்புல் அணியும், 2வது இடத்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டி அணியும் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 2க்கு1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு சீசனில் லிவர்புல் அணி முதல் தோல்வியை தழுவியது. 

மாநில அளவிலான நீச்சல் போட்டி : நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முதலிடம்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நாகையில் நடைபெற்றது. குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின விழாவை முன்னிட்டு நடந்த இந்தப் போட்டியில் 32 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்து 410 பேர் பங்கேற்றனர். FREESTYLE, BACK STROKE உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டன. இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பித்துஷா, ஜாஷ்வா தாமஸ் ஆகியோர் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் முதலிடத்தை தட்டிச் சென்றனர். 


ஆளுநர் கோப்பை கிரிக்கெட்- இறுதிச் சுற்று : கோவை பாரதியார் பல்கலைக்கழக அணி தகுதி
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆளுநர் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. தென்மண்டலத்தை சேர்ந்த பல்கலைக்கழகங்கள் கலந்துகொண்டு விளையாடிய இந்த போட்டியில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.