விளையாட்டு திருவிழா - (03.01.2019) : பயிற்சியாளருக்கு பிரியாவிடை அளித்த சச்சின்

விளையாட்டு திருவிழா - (03.01.2019) : மும்பையில் பயிற்சியாளர் ராமகண்ட் உடல் தகனம்
விளையாட்டு திருவிழா - (03.01.2019) : பயிற்சியாளருக்கு பிரியாவிடை அளித்த சச்சின்
x
விளையாட்டு திருவிழா - 03.01.2019 :
 சச்சின் டெண்டுல்கர் என்ற சரித்திர நாயகனை உருவாக்கிய பயிற்சியாளர் Ramakant Achrekar உடல்நலக் குறைவால் காலமானார். மும்பையில் நடைபெற்ற இறுதி அஞ்சலியில் சச்சின் தனது பயிற்சியாளரை சுமந்து சென்று கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தார். சச்சின் என்ற காலத்தால் அழிக்க முடியாத கிரிக்கெட் வீரரை உருவாக்கியவரின் பெரிய பங்கு Ramakant Achrekar யே சாரும். சச்சின் சிறு வயதில் விளையாடி கொண்டிருக்கும் போது, தனது ஸ்கூட்டரில் சச்சினை Achrekar அழைத்து செல்வார் ஒருநாளில் சச்சின் 4 கிரிக்கெட் போட்டிகளில், நான்கு வேவ்வேறு மைதானங்களில் விளையாடுவாராம். சச்சினை அங்கு எல்லாம் அழைத்து செல்வது அவரது பயிற்சியாளர் Achrekar தான். இதன் மூலம் தான் சச்சின் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். சச்சின் சர்வதேச கிரிக்கெட்டிற்கு சென்ற போதும் கூட, தனது பயிற்சியாளருடன் தொடர்பில் இருந்துள்ளார். ரன் அடிக்க முடியாமல் திணறிய காலத்தில் தனது குரு Achrekar யிடம் சென்று சரணடைந்துவிடுவார் சச்சின்.. குரு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு Ramakant Achrekar உம், சிஷியன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சச்சின் தான் உதாரணம். 

ப்ரோ வாலிபால் தொடர் : சென்னை அணி அறிமுக நிகழ்ச்சி
 இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல், ஐஎஸ்எல், ப்ரோ கபடி, ப்ரீமியர் பேட்மிண்டன் லீக் தொடரை தொடர்ந்து வாலிபால் விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் ப்ரோ வாலிபால் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 6அணிகள் பங்குபெற இந்த தொடர் பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்குகிறது. இதிலுள்ள அணிகளில் ஒன்றான சென்னை ஸ்பார்டன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ லோகோ, ஜெர்ஸி மற்றும் வீரர்கள் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. 

ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசிய நியூசி. வீரர்
 2019ஆம் ஆண்டின் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தும், இலங்கையும் Mount Maunganui யில் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். தொடக்க வீரர் குப்தில் சதம் விளாச,  ராஸ் டைல்ர், வில்லியம்சன் ஆகியோர் அரைசதம் விளாசினர். இறுதியில் ஜேம்ஸ் நிஷம், 49வது ஓவரில் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசி ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டினார். பெராரா வீசிய அந்த ஓவர் மட்டும் 32 ரன்களுக்கு சென்றது. இதனால் நியூசிலாந்து அணி 371 ரன்கள் குவித்தது. இலங்கை அணியும் அதிரடியாக விளையாட முயற்சித்தனர். ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை அந்த அணி இழந்தது. தொடக்க வீரர் டிக்வெல்லா 76 ரன்களும், குஷல் பெரேரா சதமும் விளாசினர். பின் வரிசை வீரர்கள் சொதப்பியதால் இலங்கை அணி 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

ஹோப்மன் கோப்பை டென்னிஸ் தொடரில் ப்லம் வாய்ந்த ஸ்பெயின் அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
 பெர்த் நகரில் நடைபெற்ற லீக் சுற்றில், முதலில் ஸ்பெயின் வீராங்கனை முகுருசாவை , ஆஸ்திரேலிய வீராங்கனை BARTY எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6க்கு3,6க்கு4 என்ற செட் கணக்கில் BARTY வென்றார். இதனிடையே ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீரர் மாத்தீவை 7க்கு6,7க்கு5 என்ற செட் கணக்கில் டேவிட் ஃபெரர் வீழ்த்தினார். கலப்பு இரட்டையர் ஆட்டத்தில், முகுருசா,டேவிட் ஃபெரர் ஜோடியை ஆஸ்திரேலிய இணையான BARTY, MATHEW ஜோடி வீழ்த்தியது

Next Story

மேலும் செய்திகள்