விளையாட்டு திருவிழா (17.12.2018) ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராட்டம்
பதிவு : டிசம்பர் 17, 2018, 08:25 PM
விளையாட்டு திருவிழா (17.12.2018) கோலிக்கு நடுவர்கள் அளித்த அவுட்டால் சர்ச்சை
ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. பெர்த் நகரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் என்ற ஸ்கோருடன் 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. கவாஜா 72 ரன்களிலும், கேப்டன் டிம் பெய்ன் 37 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின் வரிசை வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் முகமது ஷமி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

287 ரன்கள் எடுத்தால் வெற்றி  என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக அமைந்தது. ராகுல் டக் அவுட்டாகியும், புஜாரா 4 ரன்ளிலும் வெளியேறினார். கேப்டன் கோலி 17 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.  ரஹானே 30 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுக்க ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 175 ரன்கள் தேவைப்படும் நிலையில், தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராடி வருகிறது.   விஹாரி 24 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். 

கோலிக்கு நடுவர்கள் அளித்த அவுட்டால் சர்ச்சை :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு நடுவர்கள் அளித்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பாக விளையாடிய அவர், 123 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்துவீச்சில் PETER HANDSCOMB யிடம் கேட்ச் ஆனார். இது குறித்து மூன்றாவது நடுவர் ஆய்வை , கள நடுவர் நாடினார். அப்போது கேட்ச் பிடிப்பதற்கு முன் பந்து தரையில் பட்டது உறுதியானது. ஆனால், மூன்றாவது நடுவர் இதனை அவுட் என்று அறிவித்தார்.

விராட் கோலியின் விக்கெட் வீழ்ந்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக கருதப்பட்டது.  பெர்த் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார். பிராட்மேனுக்கு பிறகு அதிவேகமாக 25 டெஸ்ட் சதங்களை விளாசியவர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். ரிக்கி பாண்டிங்கிற்கு பிறகு கேப்டனாக அதிக சதம் விளாசிய வீரர் என்ற பெருமையும் கோலிக்கு சொந்தமானது. ஒரு ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய கேப்டன்கள் பட்டியலில் கோலி 2து இடத்தில் உள்ளார். இதே போன்று ஆஸதிரேலிய மண்ணில் 6 சதம் விளாசி சச்சின் சாதனையை கோலி சமன் செய்தார்.
ஐ.பி.எல். 12வது சீசனுக்கான ஏலம்:

ஐ.பி.எல். 12வது சீசனுக்கான ஏலத்தில் எந்த அணி வீரர்கள் யார் யாரை குறி வைக்கும் என்பதை தற்போது காணலாம். நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 கோடியே 40 லட்சம் ரூபாய் கையிருப்பில் உள்ளது. சென்னை அணி 2 இந்திய வீரர்கள் மட்டுமே எடுக்க முடியும். இதனால் சூழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல், வேகப்பந்துவீச்சாளர் உனாட்கட் ஆகியோரை சென்னை அணி குறி வைக்கும்.

மூன்று முறை சாம்பியனான மும்பை அணி கையிருப்பில் 11 கோடியே 15 லட்சம் ரூபாய் உள்ளது. மும்பை அணி 6 உள்ளூர் வீரர்களையும், ஒரு வெளிநாட்டு வீரர்களையும் வாங்க முடியும். இந்த தொகையை வைத்து யுவராஜ் சிங், மெக்குல்லம், பாரிஸ்டோ உள்ளிட்ட வீரர்களை குறி வைக்கும். பெங்களூரு அணி கையிருப்பில் 18 கோடியே 15 லட்சம் ரூபாய் உள்ளது. இதனை வைத்து அந்த அணி 11 இந்திய வீரர்களையும், 4 வெளிநாட்டு வீரர்களையும் பெங்களூரு அணி ஏலத்தில் எடுக்க முடியும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சிம்ரன் ஹெட்மர், தென்னாப்பிரிக்க வீரர் மார்க்கரம், மனோஜ் திவாரி,யுவராஜ் சிங் ஆகியோரை ஏலத்தில் எடுத்தால், அது அந்த அணிக்கு நல்லது. ஐதராபாத் அணிக்கு கையிருப்பு 9 கோடியே 70 லட்சம் ரூபாய் உள்ளது. அவர்களால் 3 இந்திய வீரர்கள் , 2 வெளிநாட்டு வீரர்களை வாங்க முடியும். 

நியூசிலாந்து வீரர் குப்தில், கோரி ஆண்டர்சன் ஆகியோரை அந்த அணி குறிவைக்கும். டெல்லி அணி கையிருப்பில் 25 கோடியே 50 லட்சம் ரூபாய் உள்ளது. அதனை வைத்து 7 இந்திய வீரர்கள் 3 வெளிநாட்டு வீரர்களை அவர்களால் ஏலத்தில் எடுக்க முடியும். மெக்குல்லம், அலெக்ஸ் ஹெல்ஸ், இஷாந்த் சர்மா ஆகியோரை டெல்லி அணி ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யலாம்.

இந்த ஏலத்தில் கலக்கப்போவது பஞ்சாப் அணி தான், அவர்கள் கையிருப்பில் 36 கோடியே 20 லட்சம் ரூபாய் உள்ளது. இதை வைத்து 11 இந்திய வீரர்கள் 4 வெளிநாட்டு வீரர்களை அவர்களால் எடுக்க முடியும். மேத்தீயூஸ், டிவைன் ஸ்மித் டார்சி ஷார்ட் உள்ளிட்ட வீரர்களை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுக்கலாம். 

கொல்கத்தா அணி கையிருப்பில் 15 கோடியே 20 லட்சம் ரூபாய் உள்ளது. இதனை வைத்து அவர்கள் 7 இந்திய வீரர்களையும், 5 வெளிநாட்டு வீரர்களையும் வாங்க முடியும். ராஜஸ்தான் அணி கையிருப்பில் 20 கோடியே 95 லட்சம் ரூபாய் உள்ளது. இதனை வைத்து 6 இந்திய வீரர்கள், 3 வெளிநாட்டு வீரர்களை வாங்க முடியும். 


 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.