விளையாட்டு திருவிழா - 28.11.2018 - 2018- உலகக் கோப்பை ஹாக்கி தொடக்க விழா
பதிவு : நவம்பர் 28, 2018, 08:19 PM
விளையாட்டு திருவிழா - 28.11.2018 - ஹாக்கி விளையாட்டின் விதிகள் என்ன?
விளையாட்டு திருவிழா - 28.11.2018

சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட விளையாட்டாக ஹாக்கி நம்பபடுகிறது. ஆனால் 19 ஆம் நூற்றாண்டில் தான் ஹாக்கி முறைப்படி ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. ஒரு காலத்தில் புல்தரையில் நடந்த ஹாக்கி போட்டிகள், பிற்காலத்தில் SYNTHETIC களத்தில் விளையாடப்படுகிறது. ஹாக்கியின் முழு நேரம் 60 நிமிடங்கள் தான். 15 நிமிடங்கள் 4 பிரிவுகளாக போட்டி பிரிக்கப்படுகிறது. கால்பந்துக்கும், ஹாக்கிக்கும் ஏறக்குறைய பல்வேறு விதிகள் ஒத்துப்போகும்.  கோல் போஸ்ட் அருகே உள்ள வட்டத்தில் எந்த அணி விதிமீறலில் ஈடுபட்டதோ, அதன் எதிரணி வீரருக்கு PENALTY CORNER வாய்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் எளிதில் கோல் அடிக்க முடியும். கோல் அடிக்க விடாமல் அபாயகரமாக செயல்பட்டால் PENALTY SHOT வழங்கப்படும். அதில் கோல் கீப்பர் அருகே நின்று ஒரு வீரர் மட்டும் கோல் அடிக்க முயற்சி செய்வார். PENALTY SHOT கிடைத்தால், அது  கோலாக மாற வாய்ப்பு மிக அதிகம். நாக் அவுட் உள்ளிட்ட முக்கிய போட்டியில் இரு அணியும் சரி சமமமான ஸ்கோரில் இருந்தால் PENALTY SHOOTOUT முறை கடைப்பிடிக்கப்படும். அதில் கோல் கீப்பருக்கும், வீரரும் தனியே விளையாடுவார்கள்.  இரு அணிகளுக்கும் கிடைக்கும் 5 வாய்ப்பை யார் அதிகமாக கோலாக மாற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். கால்பந்தை போல் ஹாக்கியிலும், நடுவர்கள் வீரர்களுக்கு அபாராத அட்டையை காட்டுவார். பச்சை அட்டையை காட்டினால் விதிமீறல் செய்த வீரர் 2 நிமிடம் போட்டியிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்.  மஞ்சள் அட்டை என்றால் 5 நிமிடம், சிவப்பு அட்டை என்றால் நிரந்தரமாக போட்டியை விட்டு வெளியேறிவிட வேண்டும் மாற்று வீரர்களுக்கு அனுமதி இல்லை. 

2019 ஆம் ஆண்டிற்கான மோட்டார் ரேலி பந்தயங்களை எப்படி நடத்துவது?
2019 ஆம் ஆண்டிற்கான மோட்டார் ரேலி பந்தயங்களை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்றது. முன்னணி வீரர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டின் முதல் பந்தயம் பெரு நாட்டில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஜனவரி 6 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பந்தயம், ஒட்டுமொத்தமாக ஒரே நாட்டில் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயம், பாலைவனம், கடற்பகுதி, மலைப்பகுதி என அனைத்து நிலப்பரப்பிலும் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாலைவனப்பகுதியில் நடைபெறும் சுற்று வீரர்களுக்கு கடும் சிரமத்தை உண்டாக்கும், விபத்துகளும் அரங்கேறும். சவால்களை எதிர்நோக்க தயாராக இருப்பதாக கூறிய பிரான்ஸ் வீரர் ADRIEN,அடுத்த ஆண்டு மோட்டார் ரேலி பந்தயம் அதிக ரசிகர்களை ஈர்க்கும் என்று தெரிவித்தார். 


பனிச்சறுக்கு செய்து அந்தரத்தில் சாகசம் - சீனாவில் நடைபெற்ற உலகக் கோப்பை
SNOWBOARD BIG AIR சாசகத்திற்கான உலகக் கோப்பை போட்டி அன்மையில் பீய்ஜிங் நகரில் நடந்தது. உயரத்திலிருந்து சாய்வலான பாதையில் சறுக்கி,  அந்தரத்தில் பல்டி அடித்து மீண்டும் கீழே விழாமல் சாகசத்தை முடிக்க வேண்டும் என்பதே போட்டியாகும். இதில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். ஆடவர் பிரிவில் சுவீடன் வீரர் THROGAN சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதே போன்று ஆண்களுக்கு நிகராக பெண்களும், இந்தப் போட்டியில் பங்கேற்று, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். மகளிர் பிரிவில் ஆஸ்திரிய வீராங்கனை Anna GRASSER சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.